உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதையின் தாத்பரியம்!

கீதையின் தாத்பரியம்!

கீதைகள் எத்தனையோ இருந்தாலும், கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசம் பண்ணின பகவத்கீதைக்குத் தான் உலகம் முழுக்கப் பெயர் வந்திருக்கிறது. இந்த கீதைக்கு என்ன விசேஷம்? மற்ற உபதேசம் எல்லாம் நிழலிலோ, மரத்தடியிலோ, காற்று வர்ற இடத்திலோ சவுகர்யமாக உட்கார்ந்து கொண்டு ஆசிரமத்தில் இருந்து உபதேசம் செய்வார்கள்.  பகவத்கீதை உபதேசம் பண்ணும் இடமோ, மேலே இருந்து அம்புகள் விழுந்திண்டிருக்கு. எப்ப துளைச்சு நம்ம உயிர் போகுமோ, நம்ம உயிரைச் சாப்பிடுமோ என்று உயிருக்கு ஆபத்தான யுத்தகளத்தில் உபதேசம். உபதேசம் செய்யற இடத்திலே மழைத்தூத்தல் விழுந்தால் கூட எழுந்து போயிடுவோம்.  அர்ஜுனனுக்கு யுத்தகளத்திலே உபதேசம் பண்ணினதாலே எல்லா கீதையையும் விட பகவத்கீதை அவ்வளவு பெருமை வாய்ந்தது. யுத்தம் செய்தால் பாவம் இல்லையா, பிறத்தியாருக்கு மரணம் வரும்படி செய்தால் அது பாவம் இல்லையா? என்று அர்ஜுனன் கேட்கிறான். ஒருவரிடத்திலும் துவேசம் இல்லாமலும், எந்த காரியம் செய்தாலும், அது உலகத்திற்குக் கெட்ட காரியமாக இருந்தாலும், ஆசையுடனும் துவேஷத்துடனும் செய்தால் அதுதான் பாவம் என்கிறது தான் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு வெளிப்படுத்தும் உண்மை. அதைத் தெரியப்படுத்துவது தான் பகவத்கீதையின் தாத்பர்யம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !