உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அருகே உள்ளது மிகப்பழமையான பூத நாராயணர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பெயருக்கு ஏற்ப கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். கிரிவலம் வருபவர்கள் இவரை தரிசித்தால்தான் கிரிவலம் பூர்த்தி ஆகும் என்பதாக ஓர் ஐதிகம் உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் இன்று புரட்டாசி முதல் சனி கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பூதநாராயணன் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !