உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு; பக்தர்கள் பரவசம்

அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு; பக்தர்கள் பரவசம்

கோவை ; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் கரிவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். 


இதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேல திருப்பதி எனும் மொண்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !