வால்பாறை; கருமலை பாலாஜி கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
ADDED :390 days ago
வால்பாறை; புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, வால்பாறை அடுத்துள்ள கருமலை பாலாஜி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு கணபதி ஹோமமும், 5:00 மணிக்கு பால், மஞ்சள், குங்குமம், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு, பெருமாளுக்கு அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் பாலாஜி சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விநாயகர், ஆஞ்சநேயர், மாரியம்மன் ஆகியோருக்கும் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. அதன்பின், தேரில் தேவியருடன் பெருமாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி இறைவனை மகிழ்வித்தனர். புரட்டாசி பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.