கன்னிமார் கோயில் பொங்கல் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :340 days ago
ஆண்டிபட்டி; திம்மரசநாயக்கனூர் ஊராட்சி டி.பொம்மிநாயக்கன்பட்டியில் கன்னிமார், பாண்டிகருப்பசாமி கோயில் பொங்கல் விழா நடந்தது. புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இரு நாட்கள் நடக்கும் விழாவில் மஞ்சளில் கன்னிமார் முகம் கரகம் எடுத்து வெள்ளி காப்பு அணிவித்து மலர் அலங்காரம் செய்து பூஜைகள் மேற்கொண்டனர். 2ம் நாளில் அம்மனுக்கு பொங்கலிட்டு, குழந்தைகளுக்கு மொட்டையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். காவல் தெய்வம் பாண்டி கருப்பசுவாமிக்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து படையல் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை ராம்குமார் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர். கடந்த 150 ஆண்டுக்கு மேலாக புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு விழா எடுப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.