உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்தியா முழுதும் 4 ஆண்டாக சைக்கிளில் ஆன்மிக பயணம் செல்லும் கடலுார் பக்தர்

இந்தியா முழுதும் 4 ஆண்டாக சைக்கிளில் ஆன்மிக பயணம் செல்லும் கடலுார் பக்தர்

வடமதுரை; இந்தியா முழுதும் 4 ஆண்டாக சைக்கிளில் ஆன்மிய பயணம் செய்யும் கடலுார் பக்தர் நேற்று திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வழியே பழநிக்கு சென்றார்.கடலுார் மாவட்டம் இ.ராமநாத குப்பத்தை சேர்ந்தவர் ராயர் 70. இவரது குழந்தைகள் திருமணமாகி செட்டில் ஆன நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சைக்கிளில் கிளம்பிய இவர், இந்தியா முழுதும் இருக்கும் பல்வேறு முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு சென்று சில மாதம், நாட்கள் தங்கி பின்னர் அங்கிருந்து பயணத்தை தொடர்கிறார். இவருக்கு எழுத்தறிவு இல்லாத நிலையில் செல்லும் இடங்களில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களிலும் இவரது பயணத்திற்கு உதவும் வகையில் அந்தந்த உள்ளூர் மொழிகளில் அதிகாரிகளிடம் ஒரு நோட்டில் குறிப்புகளை எழுதி பெற்றுள்ளார். கடைசியாக அயோத்தி ராமர் கோயில் சென்றவர் அங்கிருந்து ராமர், தேசிய கொடிகளை சைக்கிளில் பறக்கவிட்டபடி தமிழகம் திரும்பியுள்ளார். தற்போது தனது பயணத்தில் பழநிக்கு சைக்களில் சென்று கொண்டுள்ளார். அவர் கூறுகையில், எனது 65வது வயதில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய பயணத்தில் ஒரு ஆண்டு மட்டும் ஒரே இடத்தில் தங்கினேன். தற்போது மீண்டும் கோயில், கோயிலாக வலம் வந்து கொண்டுள்ளேன். முன்னர் தினமும் 200 கி.மீ., சைக்கிளில் பயணித்த நிலையில் தற்போது 100 கி.மீ., என குறைத்துள்ளேன். நாட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !