பெரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவில் கொலு பூஜை கோலாகலம்
ADDED :462 days ago
அன்னுார்,; அன்னுார், ஓதிமலை சாலையில் உள்ள பெரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கொலு பூஜை நடந்தது. பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடினர். அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சொக்கம்பாளையம், செல்வ விநாயகர் கோவிலில் கடந்த 4ம் தேதி மாலை தாசபளஞ்சிக மாதர் சங்கம் சார்பில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. ஜெயலட்சுமி தாமோதரன், திருவிளக்கு பூஜையின் பலன் குறித்து பேசினார். நேற்று முன்தினம் அன்னுார் இலக்கிய பேரவை செயலாளர் கண்ணன் குமார் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. மன்னீஸ்வரர் கோவிலில் மகா மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சின்னம்மன் கோவில், மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் ஆகிய கோவில்களில் நேற்று முன்தினம் இரவு நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.