சோழவந்தான் மகாசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் உற்ஸவம்
ADDED :365 days ago
சோழவந்தான்; சோழவந்தான் அருகே தாமோதரன்பட்டியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் உற்ஸவ விழா 5 நாட்கள் நடந்தது. முதல் நாள் மகளிர் குழு சார்பில் அன்னதானம், மாலை விளக்கு பூஜை நடந்தது. 2ம் நாள் மாமரம் பூஞ்சோலையில் இருந்து சக்தி கரகம் எடுத்து வானவேடிக்கையுடன் கோயில் வந்தனர். அம்மனுக்கு பூச்சொரிதல் விழா, மாவிளக்கு பூஜை, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சார்பில் வானவேடிக்கை, கரகாட்டம், நாடகம் நடந்தன. 3ம் நாள் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். 4,5ம் நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.