வெள்ளி கற்பக விருஷவாகனத்தில் ஸ்வாமி உலா!
ADDED :4736 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், நான்காம் நாள் விழாவில் வெள்ளி கற்பக விருஷ வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வந்தார்.நேற்று காலையில் நடந்த வீதி உலாவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும் , சந்திரசேகரர் நாக வாகனத்திலும் வீதி உலா வந்தனர். இரவு, 10 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவில் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வாணை சமேத முருகர் வெள்ளிமயில் வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர் கற்பக விருஷ வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.