/
கோயில்கள் செய்திகள் / வேதாந்த தேசிகர் தங்க பல்லக்கில் உலா; கந்தப்பொடி வசந்தம் உற்சவத்துடன் விழா நிறைவு
வேதாந்த தேசிகர் தங்க பல்லக்கில் உலா; கந்தப்பொடி வசந்தம் உற்சவத்துடன் விழா நிறைவு
ADDED :473 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், புரட்டாசி மஹோத்சவம் கடந்த 3ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடக்கும் உற்சவத்தில் தினமும், வெவ்வேறு அலங்காரத்தில், பல்வேறு வாகனத்தில் வேதாந்த தேசிகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி, 10ம் உற்சவமான நேற்று காலை, விளக்கொளி பெருமாள் மங்களாசாசனமும், தேவாதிராஜன் பெரிய தங்கப்பல்லக்கில், பேரருளாளன் மங்களாசாசனத்திற்கு அஞ்சலி திருக்கோலத்தோடு எழுந்தருளும் உற்சவமும், மாலை புஷ்ப பல்லக்கு உற்சவமும் நடந்தது. இன்று காலை, கந்தப்பொடி வசந்தம் உற்சவத்துடன், வேதாந்த தேசிகரின் மஹோத்சவம் நிறைவு பெறுகிறது.