/
கோயில்கள் செய்திகள் / மரக்கன்று நட தோண்டி குழிக்குள் இருந்து வந்த அம்மன் சிலை, சூலாயுதம்; பக்தர்கள் பரவசம்
மரக்கன்று நட தோண்டி குழிக்குள் இருந்து வந்த அம்மன் சிலை, சூலாயுதம்; பக்தர்கள் பரவசம்
ADDED :366 days ago
கிருஷ்ணகிரி; தேன்கனிக்கோட்டை அருகே பாலதொட்டனப்பள்ளியில் பழமை வாய்ந்த பெரியம்மா கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டி உள்ளனர். அப்போது உலோகத்தாலான 2 அடி உயரமுள்ள சூலாயுதம் கிடைத்தது. தொடர்ந்து தோண்டியது போது ஒன்னரை அடி உயரமுள்ள உலோக அம்மன் சிலையும் கிடைத்தது. அம்மன் சிலை, சூலாயுதத்தை சுத்தம் செய்து கிராம மக்கள் வழிபட்டனர். இந்த தகவல் பரவியதையடுத்து ஆர்வமுடன் வந்து பலரும் சிலையை பார்த்து, தரிசனம் செய்து செல்கின்றனர்.