உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி அபிதகுஜாம்பாளுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

செஞ்சி அபிதகுஜாம்பாளுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

செஞ்சி;  செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவில் அபிதகுஜாம்பாள் அம்மனுக்கு விஜயதசமியை முன்னிட்டு ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். செஞ்சி, பீரங்கிமேடு அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் விஜயதசமி விழா நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அருணாச்சல ஈஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை 1.50 லட்சம் ரூபாய் நோட்டுகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். மாலை 6:00 மணி முதல் பக்தர்கள் தரிசனமும், இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !