மோகினி அவதாரத்தில் சஞ்சீவராய பெருமாள்; திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED :438 days ago
உடுமலை; கரட்டுமடம் சஞ்சீவராய பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத சிறப்பு பூஜையில், மோகினி அவதாரம் கொண்ட பெருமாளை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உடுமலை அருகே கரட்டுமடத்தில், பழமை வாய்ந்த சஞ்சீவராய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், புரட்டாசி மாதத்தையொட்டி, நாள்தோறும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அலங்கார தீபாராதனை; சாற்று முறை பாராயணம்; உபசார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மோகினி அவதாரம் கொண்ட பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.