காரியாபட்டி மகா காளியம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :434 days ago
காரியாபட்டி; காரியாபட்டியில் ஜெகஜீவன் ராம் தெருவில் உள்ள மகா காளியம்மன் கோயில், காமராஜர் காலனியில் உள்ள சக்தி காளியம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா நடந்தது. அக்.8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று ஏ.நெடுங்குளம் தெற்காற்றில் பக்தர்கள் பால்குடம், பறவை காவடி, ஆ 6 முதல் 12 அடியில் உடலில் அலகு குத்தி ஐயப்பன் கோயில், பஜார், போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். பறவை காவடி எடுத்த பக்தர் ஆட்டோவில் அந்தரத்தில் தொங்கி, பழங்கள், இளநீர், முகம் முழுவதும் அலகு குத்தி வினோத நேர்த்திக்கடன் செலுத்தினார். பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து காளியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.