உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசி முப்பெரும் தேவியர், பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி மகா பெரும் பூஜை விழா

தென்காசி முப்பெரும் தேவியர், பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி மகா பெரும் பூஜை விழா

தென்காசி ; புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில்  பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன்,நாகம்மன் கோவிலில்  ஐப்பசி மகா பெரும் பூஜை திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு  அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், தயிர், தேன், சந்தனம், குங்குமம், உள்பட 21 வகையான, நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனை நடைபெற்றது. இப்பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் திருமணத்தடை, குழந்தை வரம், வியாபாரம் அபி விருத்தி, பில்லி சூனியம், ஏவல், நீக்கி சந்தோஷமான வாழ்வு கிடைக்கும்  என்பது ஐதீகம். தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து இரண்டு ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதியம் 12 மணி முதல் அன்னதானம் நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை கோவில்  நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !