பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண விழா துவக்கம்
ADDED :726 days ago
திருநெல்வேலி; பாளை கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் (சிவன்) கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு பல்வேறு சிறப்பு அலங்கார தீபாராதனைகள், பூஜைகள் நடக்கின்றன.