உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சி.என்.கிராமம் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீட கோயிலில் புஷ்பாஞ்சலி

சி.என்.கிராமம் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீட கோயிலில் புஷ்பாஞ்சலி

திருநெல்வேலி; நெல்லை சி.என்.கிராமம் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீட கோயிலில் புஷ்பாஞ்சலி வழிபாடு நடந்தது. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கடந்த 3ம் தேதி நவராத்திரி விழா துவங்கி, 12ம் தேதி வரை நடந்தது. நேற்று முன்தினம் குருவார வழிபாடு முடிந்து புஷ்பாஞ்சலி நடந்தது. சித்தர் சக்தி பீடத்திலும் அகண்டஜோதி ஏற்றப்பட்டது. அகண்டஜோதியில் குரு ஜோதியாய் பக்தர்களுக்கு அம்பாள் காட்சி அளித்தார். நெல்லை மாவட்ட தலைவர் நாகராஜன் வழிகாட்டுதல் படி சக்திபீட தலைவர் ராமாசக்தி, திருவிழா பொறுப்பாளர்கள் நம்பு சக்தி, கலா கண்ணன் சக்தி, ரேவதி சக்தி, பூர்ணகலா சக்தி, ராஜமுருகன் சக்தி, வேள்விக்குழு ஒருங்கிணைப்பாளர் சுதன் சக்தி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !