பழநியில் பக்தர்கள் கூட்டம்; காத்திருந்து சுவாமி தரிசனம்
ADDED :437 days ago
பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநி கோயிலில் நேற்று, விடுமுறை நாளை முன்னிட்டு தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர். வின்ச் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். மலைக்கோயில் கட்டண தரிசன வரிசையில் சரியான வசதிகள் இல்லாததால் வெயிலில் காத்திருந்தனர். சிலர் குடைகளைப் பிடித்து இருந்தனர். தடையை மீறி பக்தர்கள் சிலர் அலைபேசிகளை எடுத்து வந்திருந்தனர். ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தரிசனம் செய்ய பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்தனர். மலை கோயிலில் கை குழந்தைகளுக்கு பால் இலவசமாக கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.