உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுவாய் மஞ்சள் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கொடுவாய் மஞ்சள் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பொங்கலூர்; கொடுவாய் சாய்ராம் நகர் ஸ்ரீ மஞ்சள் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.


கும்பாபிஷேக விழாவையொட்டி கோபுர கலசம், தீர்த்த குடம், முளைப்பாரிகை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. விக்னேஷ்வர பூஜை, புண்யாகம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக் ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக வழிபாடு, எண் வகை மருந்து சாற்றுதல் நடந்தது. இன்று காலை, 9 :00மணிக்கு கோபுர மகா கும்பாபிஷேகம், மூலாலய கும்பாபிஷேகம் நடந்தது. கோவை விஷ்ணு சிவம் சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பின் மகா அபிஷேகம், தசதானம், தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சாய்ராம் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !