உடுமலை சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :432 days ago
உடுமலை; உடுமலை கிளைச்சிறை, சார்நிலைக்கருவூலம், சார்பதிவாளர் அலுவலக வளாக பகுதியில், ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த, 20ம் தேதி யாக சாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, இரண்டு கால பூஜைகள் நடந்தன. நேற்றுமுன்தினம், நாடி சந்தானம், நிறைவேள்வி, யாத்ரா தானம், தீபாராதனையை தொடர்ந்து, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.