உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :706 days ago
கோவை; உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஐப்பசி முதல் புதன்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.