பழநி வேணுகோபால சுவாமி கோயிலில் கருவறை பாலாலயம்
ADDED :430 days ago
பழநி; பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் கருவறை பாலாலய யாகம் நடைபெற்றது. பழநி காந்தி ரோட்டில் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயில் கும்பாபிஷேகம் நடைபெற தீர்மானிக்கப்பட்டது. வேணுகோபால சுவாமி கோயிலில் பாலாலய பூஜை நடைபெற்றது. புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கருவறை பணிகள் நடைபெற நேற்று கோயில் கருவறை, பாலாலயம் நடைபெற்றது. இதில் யாக பூஜைகள் நடைபெற்று கருவறை பாலாலயம் கண்ணாடி பயன்படுத்தி செய்யப்பட்டது. யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலச புனித நீரில் அபிஷேகம் நடைபெற்றது. வாஸ்து பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோயில் உதவி கமிஷனர் லட்சுமி, கண்காணிப்பாளர் அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.