உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை தரும் மாரியம்மன் கோயிலில் உலக நன்மை, மழை வேண்டி வழிபாடு

மழை தரும் மாரியம்மன் கோயிலில் உலக நன்மை, மழை வேண்டி வழிபாடு

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் மழை தரும் மாரியம்மன் கோயிலில் மழை, உலக நன்மை வேண்டி சிறப்பு அபிஷேகம் நடந்தன. முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோயிலில் பக்தர்களுக்கு கூழ், பொங்கல் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !