உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியம்மா சொன்ன ஆறுதல்

பெரியம்மா சொன்ன ஆறுதல்

தன் தாய் கைகேயி பெற்றுத் தந்த அயோத்தியை ஆட்சி செய்ய பரதன் மறுத்து விட்டான். இருந்தாலும், ராமன் காட்டிலிருந்து வரும்வரை, அவரது பாதுகைகளை பீடத்தில் வைத்து அவனது பிரதிநிதியாக இருந்து ஆட்சி நடத்தினான். ராமன் மீண்டும் அரசாட்சியை ஏற்காவிட்டால் தீயில் விழுந்து இறந்து விடுவதாக சபதம் செய்தான். 14 ஆண்டுகள் கழிந்தபின்னும் ராமன் வராததால், தீயில் புகுந்து உயிர்விடத் துணிந்தான். அப்போது கோசலையின் மனம் பொறுக்கவில்லை. ""பரதா! பல ராமன்கள் வருகிறார்கள், போகிறார்கள்! ஆனால், அரசாட்சியை விரும்பாமல் துறவி போல வாழ்ந்த பவித்ரமானவன் நீ. உன் உயிர் போனால் இம்மண்ணில் உயிர்கள் வாழ முடியாது, என்று சொல்லி கட்டியணைத்து அழுதாள். பெரியம்மாவின் அன்பான வார்த்தை கேட்ட பரதன் ஆறுதல் அடைந்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !