உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமந்திரம் ஒர் உயிர் மந்திரம் நூல் வெளியீடு

திருமந்திரம் ஒர் உயிர் மந்திரம் நூல் வெளியீடு

சூலூர்; திருமந்திரம் ஓர் உயிர் மந்திரம் எனும் நூல் வெளியீட்டு விழா சூலூரில் நடந்தது. திருமூலர் வாழ்வியல் அறக்கட்டளை சார்பில், திருமந்திரம் ஓர் உயிர் மந்திரம் எனும் நால் வெளியீட்டு விழா சூலூரில் நடந்தது. நூலாசிரியர் பேராசிரியர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.பேராசிரியர் குரு செல்வராஜ் நூலினை வெளியிட, பேராசிரியர் ரேவதி பெற்றுக்கொண்டார். இந்நூலில் ஒன்பது தந்திரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, 63 பாடல்கள் மட்டுமே உள்ளது. உபதேசம் அவையடக்கம், யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, அரசாட்சி முறை, அன்புடைமை, அறம், கரு உற்பத்தி, பிராணாயாமம், தியானம் உள்ளிட்ட தலைப்புகளில் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணன், கணேசன், மூர்த்தி லிங்க தம்புரான் சுவாமிகள், அறக்கட்டளை தலைவர் பெருமாள் சாமி, பொருளாளர் நடராஜன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !