கூடல் சுந்தரவேலர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது
ADDED :423 days ago
கூடலுார்; கூடலுார் கூடல் சுந்தரவேலர் கோயிலில் 27வது ஆண்டு கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு பிரார்த்னை நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். பக்தர்களுக்கு அபிஷேகப் பால், மாவு, பழச்சாறு பிரசாதமாக வழங்கப்பட்டது. கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் விரதம் இருப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.