பல்லடம் முத்துக்குமாரசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
                              ADDED :360 days ago 
                            
                          
                           பல்லடம்; பல்லடம் அருகே, மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
நவ., 7, கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில், கந்த சஷ்டி துவக்க விழா, இன்று காலை, 4.00 மணிக்கு விநாயகர் வேல்வியுடன் துவங்கியது. தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் கோவிலை சுற்றி வளமாக எடுத்துவரப்பட்டு, முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜைகள் நடந்தன. இதனையடுத்து நடந்த கொடியேற்று விழாவை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், காப்புக் கட்டி கந்தசஷ்டி விரதத்தை துவக்கினர். வரும், 7ம் தேதி மாலை, 5.30க்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.