உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டுப் பல்லக்கில் சயன கோலத்தில் வீதி உலா வந்த கவுரி அம்மன்

பட்டுப் பல்லக்கில் சயன கோலத்தில் வீதி உலா வந்த கவுரி அம்மன்

பரமக்குடி; பரமக்குடி கேதார கவுரீஸ்வரி அம்மன் கோயில் நோன்பு விழாவில் அம்மன் சயன திருக்கோலத்தில் வீதி உலா வந்தார். இக்கோயிலில் ஐந்து நாட்கள் கவுரி நோன்பு விழா நடந்தது. தினமும் அம்மன் பல்வேறு திருகோலங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு விழா நிறைவடைந்ததையொட்டி அம்மன் பட்டுப் பல்லக்கில் சயன திருக்கோலத்தில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !