உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொங்கனகிரி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை

கொங்கனகிரி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை

அனுப்பர்பாளையம்; திருப்பூர், காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள கொங்கனகிரி அருள்மிகு ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீகந்த சுப்பிரமணியசுவாமி கோவிலில் 13 ம் ஆண்டு கந்தசஷ்டி, சூரசம்ஹார மற்றும் திருகல்யாண விழா கடந்த 2 ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 ம் தேதி மாலை சூரசம்கார விழாவும், 8 ம் தேதி காலை திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது‌. விழாவையொட்டி, கடந்த 2 ம் தேதி முதல் தினசரி காலை கந்த பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையும் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையில் நுற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


*அதுபோல், திருப்பூர் அவிநாசி ரோடு தண்ணீர் பந்தல் காலனி கருப்பராயன் சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பால முருகன் சுவாமிக்கு கந்த சஷ்டி அபிஷேக பூஜை தினசரி நடைப்பெற்று வருகிறது. இன்று நடந்த நான்காவது சிறப்பு அபிஷேக பூஜையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !