வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி திருக்கல்யாணம்
ADDED :684 days ago
வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் இருக்கும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது. மாலை துவங்கி சிறப்பு யாக வேள்வி பூஜைகளும், தொடர்ந்து 11 வித பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்தனர்.