காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் திருவோண சிறப்பு வழிபாடு
ADDED :430 days ago
ஆனைமலை: ரங்கநாத பெருமாள் கோவிலில், திருவோண நட்சத்திர திருவிழா நடந்தது. ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ஐப்பசி மாத திருவோண நட்சத்திர சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், பச்சை அரிசி மாவு, உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேகம் மற்றும் ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜை நடந்தது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.