உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் வைபவம்

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் வைபவம்

திருச்செந்துார்; திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவில், சுவாமி குமரவிடங்கப் பெருமான், தெய்வானை அம்பாள் பட்டினப் பிரவேசம் நடந்தது. 


திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா 12நாட்கள் நடைபெறும். இவ்விழா, கடந்த 2ம்தேதி தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கி 7ம் தேதி சூரசம்ஹாரம், 8ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. 8ம் நாள் விழாவான நேற்று முன்தினம், இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூஞ் சப்பரத்திலும் எழுந்தருளி, பட்டினப் பிரவேசம் நடைபெற்றது. 


ஊஞ்சல் வைபவம்: 9ம் நாளான நேற்றிலிருந்து நாளை வரை, 3 நாட்கள் மாலையில் கோயில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. 12ம் திருவிழாவான 13ம் தேதி மஞ்சள் நீராட்டு வைபவத்துடன், விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில்தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !