உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் துவாதசி சிறப்பு பூஜை
ADDED :664 days ago
கோவை; உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. .இதில் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.