கோவை ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் அன்னாபிஷேகம்
ADDED :427 days ago
கோவை; சுண்டைக்காமுத்தூர் பை-பாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் ஐப்பசி பௌர்ணமி தினத்தையொட்டி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் அன்னாபிஷேக சர்வஅலங்காரத்தில் ஜலகண்டேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக அன்னம் வழங்கப்பட்டது.