பெரிய திருவடியில் அழகர் வீதி உலா; தைலக்காப்பு உற்சவம் நிறைவு
ADDED :424 days ago
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தைலக்காப்பு விழாவின் நிறைவு நாளில் பெரிய திருவடியான கருட வாகனத்தில் அழகர் வீதி உலா வந்தார். மதுரை அழகர் கோவிலில் தொட்டி திருமஞ்சனம் எனும் தைலக்காப்பு விழா நடந்த நிலையில், பரமக்குடியில் நவ.12 அன்று துவங்கியது. சயன திருக்கோலத்தில் இருந்தார். மறுநாள் பெருமாள் சிகையில் தைலம் தேய்க்கப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மேலும் மதுரை திருமாலிருஞ்சோலை நூபுர கங்கை தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று மாலை 6:00 மணிக்கு பெரிய திருவடியான கருட வாகனத்தில் அழகர் அலங்காரமாகினார். பின்னர் பாகவதர்களின் பஜனை பாடல்கள் பாடியபடி வீதி உலா நடந்தது.