ஆபசகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்; சிறப்பு பூஜை
ADDED :684 days ago
கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள ஆபசகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு 108 சங்கு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.