உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலக்கரமனுாரில் அய்யப்பசுவாமி விளக்கு பூஜை

மேலக்கரமனுாரில் அய்யப்பசுவாமி விளக்கு பூஜை

ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அருகே, மேலக்கரமனுார் கிராமத்தில், 9ம் ஆண்டு அய்யப்பசுவாமி விளக்கு பூஜை நடந்தது. அங்குள்ள கற்பக வினாயகர் கோவிலில், அய்யப்ப சுவாமி படத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு உற்சவர் அய்யப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில், பெண்கள் விளக்கேந்தி செல்ல திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அய்யப்பசுவாமி மாலை அணிந்த பக்தர்கள் பஜனை பாடி சென்றனர். இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !