தினமலர் செய்தி எதிரொலி; திரவுபதியம்மன் கோவில் திறக்கப்பட்டு பூஜை
ADDED :353 days ago
நடுவீரப்பட்டு; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், நடுவீரப்பட்டு அருகே திரவுபதியம்மன் கோவில் திறக்கப்பட்டு பூஜை நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த மூலக்குப்பத்தில் திரவுபதியம்மன் கோவில் இருதரப்பு பிரச்னை காரணமாக, அறநிலையத்துறை கட்டுபாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது. இக்கோவில் கடந்த பல மாதங்களாக திறக்கப்படாமல் பூஜை செய்யாமல் பூட்டியே இருந்தது. இந்த பகுதியில் உள்ள ஒரே கோவில் இதுமட்டுமே. இதனால் அப்பகுதி மக்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று மாலை கோயிலை திறந்து, கார்த்திகை மாத முதல் சோமவார பூஜையை நடத்தினர். இதனால் பொதுமக்கள் மற்றும் ஆன்மிக பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.