உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2 லட்சம் கயறுகளால் உருவான சிதம்பரம் நடராஜர் கோயில் தேர் வடம்

2 லட்சம் கயறுகளால் உருவான சிதம்பரம் நடராஜர் கோயில் தேர் வடம்

சிங்கம்புணரி; சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்திற்காக 2 லட்சம் கயிறுகளால் தலா 200 அடி நீளமுள்ள 10 தேர்வட கயிறுகள் சிங்கம்புணரியில் தயாரித்து அனுப்பப்பட்டது.


சிங்கம்புணரி உப்புச்செட்டியார் தெருவில் பலர், தலைமுறைகளாக கயிறு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு தேவையான தேர்வடக் கயிறுகள் பிரம்மாண்ட அளவில் தயாரித்து அனுப்பப்படுகிறது. தற்போது சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி தேரோட்டத்திற்கு தேவையான தேர்வடக் கயிறுகள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. 2 மாதங்களாக இரவு பகலாக சேவுகப்பெருமான் ஐயனார் கோவில் ரத வீதியில் இக்கயிறுகளை ஊழியர்கள் தயாரித்தனர். பிரியா, தேர்வட தயாரிப்பாளர்; சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன தேரோட்டத்திற்காக தல 200 அடி நீளம் கொண்ட 10 தேர்வடக்கயிறுகள் தயாரித்துக் கொடுக்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. 30 தொழிலாளர்கள் 48 நாள் விரதம் இருந்து 2 மாதமாக இரவு பகலாக கயிறுகளை தயாரித்துள்ளோம். 25 டன் எடையுள்ள தேங்காய் நார்களால் 2 லட்சம் கொச்ச கயிறுகளை கொண்டு இந்த வடம் தயாரிக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களுக்கு தேவையான நீள, அகலத்தில் தேர்வட கயிறுகளை தயார் செய்து அனுப்புகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !