திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் ரூ.2.55 லட்சம்
ADDED :336 days ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2,55,549 வசூல் ஆனது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டாலீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடந்தது. அறங்காவல் குழு தலைவர் ஜெய்சங்கர், உறுப்பினர் சுப்பிரமணியன் முன்னிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் கவிதா, திருக்கோவிலூர் செயல் அலுவலர் பாக்கியராஜ் தலைமையில், கோவில் எழுத்தர் நரேஷ்குமார் மற்றும் மாணவர்கள் இணைந்து உண்டியலைத் திறந்து காணிக்கையை எண்ணினர். இதில் ரூ. 2,55,549 வசூல் ஆனது தெரியவந்தது.