ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு கார்த்திகை சோமவார கலசாபிஷேகம்
ADDED :525 days ago
கோவை; ராம்நகர், கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு கார்த்திகை இரண்டாம் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு ம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடைபெற்றது. இதில் மூலவர் சிவலிங்கத்திற்கு108 கலசாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சிவன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.