திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் லிங்க வடிவில் 108 சங்காபிஷேகம்
ADDED :283 days ago
திருப்புவனம்; சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் கார்த்திகை 2வது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. காலை ஒன்பது மணிக்கு புஷ்பவனேஷ்வரர் சன்னதி முன் லிங்க வடிவில் 108 சங்குகளை வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. 12:00மணிக்கு பூஜை நிறைவடைந்து புஷ்பவனேஷ்வரருக்கு அபிஷேகம் நடந்தது .108 சங்காபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி.எஸ்.கே., மதுராந்தகி நாச்சியார் அவர்களின் உத்தரவின் பேரில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் கோயில் சிவாச்சார்யார்கள் ஏற்பாடு செய்திருந்தனர் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.