ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம்
ADDED :283 days ago
ஒட்டன்சத்திரம்; நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. நவாமரத்துப்பட்டிபுதூர் பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடந்தது. விருப்பாச்சி தலையூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது.