உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் ஒரு சாஸ்தா – 14; நிலப்பிரச்னையா... மேலக்கால் அய்யனார்

தினமும் ஒரு சாஸ்தா – 14; நிலப்பிரச்னையா... மேலக்கால் அய்யனார்

மதுரை சோழவந்தான் மேலக்காலில் அருள்புரியும் அய்யனாரை வணங்கினால் நிலப்பிரச்னை தீரும். மழைநீரை தேக்கி வைக்க குளம் கட்ட விரும்பினர் மக்கள். இதற்காக வனமாக இருந்த இப்பகுதியில் மண்வெட்டினர். அப்போது 15 அடி ஆழத்தில் சுவாமி பீட சிலைகள் கிடைத்தன. அந்நேரம் ஒருவருக்கு அருள் வந்து, ‘இங்கு கோயில் கட்டி வழிபடுங்கள்’ என்றார். குளம் தோண்டிய மண்ணில் கோயில் கட்டப்பட்டது. அன்று முதல் குலதெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். கோயில் வாசலில் இடது பக்கம் குதிரை வாகனத்தில் அய்யனார், வலது பக்கம் குதிரையில் கருப்பணசாமி, பரிவார தெய்வ சிலைகள் உள்ளன. செவ்வாயன்று மூலவரான அய்யனாரை வழிபட்டால் பிரச்னை தீரும். 

வைகாசி, மகாசிவராத்திரியன்று சிறப்பு பூஜை நடக்கிறது. 


எப்படி செல்வது: சோழவந்தானில் இருந்து 6 கி.மீ., 

நேரம்: காலை 6:30 – 2:00 மணி, மாலை 4:00 – 6:00 மணி

தொடர்புக்கு: 99433 41815


அருகிலுள்ள தலம்: சோழவந்தான் திருமூலநாத சுவாமி 

நேரம்: காலை 6:00 – 12:00 மணி, மாலை 5:00 – 8:00 மணி

தொடர்புக்கு: 04543 – 260 143


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !