ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சம்பக சஷ்டி விழா துவக்கம்
ADDED :278 days ago
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் சம்பக சஷ்டி விழா டிச.1 ல் துவங்கியது. தினமும் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடக்கிறது. டிச.6 ல் சம்பக சஷ்டி விழா நிறைவு பெறும். விழா ஏற்பாடுகளை சம்ஹார பைரவர் குழு மற்றும் நகர் வளர்ச்சி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.