வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை சஷ்டி பூஜை
ADDED :618 days ago
வால்பாறை; வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி நடந்த சஷ்டி பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை மாத சஷ்டி பூஜையான இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன்பின், காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிஷேக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்கள் பக்தி பாடல்களை பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் கார்த்திகை மாத சஷ்டி பூஜை சிறப்பாக நடந்தது.