சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சம்பக சஷ்டி விழா; காலபைரவருக்கு 21 வகை அபிஷேகம்
ADDED :326 days ago
முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள காலபைரவருக்கு 13ம் ஆண்டு சம்பக சஷ்டி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த டிச.1ல்காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் பைரவருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. தற்போது சம்பக சஷ்டி நிறைவு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கி கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை |அஷ்ட பைரவர் யாகம், மகா பூர்ணாஹூதி தீபாரதனை நடந்தது. பின்பு பைரவருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம் ,சிறப்புபூஜை நடந்தது.அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை பைரவர் அஷ்டமி குழு விழா கமிட்டினர் செய்தனர்.விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.