சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் திருஏடு வாசிப்பு
                              ADDED :328 days ago 
                            
                          
                          
கன்னியாகுமரி; சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா இன்று தொடங்கியது. அய்யா வைகுண்ட சாமி எடுத்துரைத்த கருத்துகளை அவரின் சீடர்களில் ஒருவரான அரிகோபால சீசர் எழுதிய அகிலத்திரட்டுஅம்மானை அய்யா வழி மக்களின் புனித நூலாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய பக்தா்களுக்கு அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துகளை திருஏடாக வாசிப்பது வழக்கம். இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா நேற்று (6ம்தேதி) மாலை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.