காயநிர்மலேஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
                              ADDED :328 days ago 
                            
                          
                          
சேலம்; ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் சார்பில், ஐயப்பன் சுவாமி சன்னதி முன் திருவிளக்கு பூஜை நடந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த காயநிர்மலேஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. ஐயப்ப பக்தர்கள் சார்பில், ஐயப்பன் சுவாமி சன்னதி முன் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.