தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
ADDED :621 days ago
திருப்பூர்; திருப்பூர், தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில் கார்த்திகை மாதம் நான்காவது சனிக்கிழமை மற்றும் சப்தமி நிதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.